உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சிறப்பு பஸ்கள் போக்குவரத்து துவக்கம்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சிறப்பு பஸ்கள் போக்குவரத்து துவக்கம்

தாயமங்கலம்: இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா துவக்கத்திற்கு முன்னரே பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் சிறப்பு பஸ்கள் போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது.

இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா வருடந்தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவின் போது மதுரை,அருப்புக்கோட்டை,விருதுநகர், சிவகங்கை,மானாமதுரை,இளையான்குடி, காரைக்குடி,திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து முடிகாணிக்கை,தீச்சட்டி,கரும்பு தொட்டில் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் விழா வருகிற 29ம் தேதி இரவு 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.5ந் தேதியும்,மின் அலங்கார தேர்பவனி 6ந் தேதி இரவும் நடைபெற உள்ளது.இந்த விழாவிற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.இந்நிலையில் பங்குனி மாதம் பிறந்து 4 நாள்கள் ஆனதை தொடர்ந்து பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை தொடர்ந்து மதுரை,அருப்புக்கோட்டை ,விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் போக்குவரத்து கடந்த 3 நாட்களாக தாயமங்கலத்திற்கு சென்று வருகிறது. பொங்கல் விழா கொடியேற்றத்திற்கு பிறகு ஏராளமான ஊர்களிலிருந்து நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் தலைமையில் அலுவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !