உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தலைவலி தீர்க்கும் வலம்புரி விநாயகர் கோவிலில் வருடாபிஷேகம்

தலைவலி தீர்க்கும் வலம்புரி விநாயகர் கோவிலில் வருடாபிஷேகம்

பழநி: பழநி, கிழக்கு கிரி வீதியில் உள்ள தலைவலி தீர்க்கும் வலம்புரி விநாயகர் கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது. பழநி, கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கீழ் வீதி தலைவலி தீர்க்கும் வலம்புரி விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம், கணபதி பூஜையுடன் நடந்தது. கலசத்தில் புனித நீர் நிரப்பி யாக குண்டமும் வைத்து வேத மந்திரங்கள் முழங்க யாகம் நடைபெற்றது. அதன் பின் யாகத்தில் வைக்கப்பட்ட கலச நீரில் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம், தீபாதாரணை நடைபெற்றது. பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !