உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெயிலில் வாடும் பக்தர்கள்

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெயிலில் வாடும் பக்தர்கள்

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொது தரிசன வழி வடக்கு கிரிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்ட தகரக் கொட்டகையின் மேல்பகுதி காற்றில் ஆடியதால் குறிப்பிட்ட தூரம் மேற்பகுதி கழட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் தகிதகிக்கும் கோடை வெயிலில் பரிதவிக்க வேண்டிய பரிதாபநிலை உள்ளது. பக்தர்கள் வாட்டி வதைக்கும் வெயிலின் உக்கிரத்தில் விடுபட, கோயில் நிர்வாகம் மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !