அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் பங்குனி குங்கும அர்ச்சனை
ADDED :1007 days ago
தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில், பங்குனி மாத சிறப்பு பூஜையை முன்னிட்டு, லலிதா சகஸ்ர நாம குங்கும அர்ச்சனை நடந்தது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, பெண்கள் குங்குமம் வைத்து குங்கும பூஜையில் ஈடுபட்டனர். தொடர்ந்து 1008 மந்திரங்கள் முழங்க, மாங்கல்ய பூஜையும், உலக நன்மை வேண்டி கூட்டு வழிபாட்டு பூஜையும் நடைபெற்றது. இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.