ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஓலைச்சுவடிகள் ஆய்வு
ADDED :958 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஹிந்து அறநிலைத்துறையினர் பழமையான ஓலைச் சுவடிகளை ஆய்வு செய்தனர்.
ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் திருக்கோயில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஹிந்து அறநிலைத்துறையின் முக்கிய கோயில்களில் ஹிந்து அறநிலையத்துறையின் தொல்லியல் துறையினர் பழமையான ஓலைச் சுவடிகளை ஆய்வு செய்கின்றனர். அதன்படி ராமேஸ்வரம் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள ஆவண காப்பக அறையில் உள்ள பழமையான ஓலைச் சுவடிகளை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து சில தகவல் சேகரித்து சென்றனர். இந்த ஓலைச் சுவடியில் தமிழகத்தில் உள்ள தொன்மையான கோயில்களில் பின்பற்றப்படும் ஆன்மீக மரபுகள், பூஜை, அபிஷேகம்,, சமய சடங்குகள் உள்ளிட்ட முக்கியமான ஆன்மிக தகவல்களை சேகரித்தனர். இக்குழுவினர் 2ம் கட்டமாக அடுத்த வாரம் ஆய்வு செய்ய உள்ளனர் என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.