உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / களக்காடு கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி : பக்தர்கள் பரவச தரிசனம்

களக்காடு கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி : பக்தர்கள் பரவச தரிசனம்

களக்காடு: களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்ச்சி நேற்று நடந்தது . களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோயிலில் மார்ச், செப். மாதங்களில் 20, 21, 22ம் தேதிகளில் மட்டும் 3 நாட்கள் மூலஸ்தான சிவன் மீது சூரியஒளி விழும் அதிசயம் நடந்து வருகிறது. நேற்று அதிகாலைசூரிய ஒளி மூலவர் மீது விழும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை கோயில் கொடி மர மண்டபம், கொலு மண்டபம், மணி மண்டபம் வழியாக சிவன் மீது சூரிய ஒளி விழுந்தது. இதனை பக்தர்கள் பரவசத்துடன் கண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !