உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணியில் பங்குனி பிரம்மோற்ஸவம் மார்ச் 28 ல் துவக்கம்: ஏப்., 5 தேரோட்டம்

திருப்புல்லாணியில் பங்குனி பிரம்மோற்ஸவம் மார்ச் 28 ல் துவக்கம்: ஏப்., 5 தேரோட்டம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44 ஆவதாக திகழ்கிறது. இங்கு வருகிற மார்ச் 28 செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணி முதல் 11.30  மணிக்குள் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி சிறப்பு பூஜையுடன் நடக்க உள்ளது. காலை மற்றும் இரவு நேரங்களில் பல்லக்கு, சிம்ம, அனுமார், கருட சேவை, சேக்ஷ  வாகனம், சொர்ணஹம்ச வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்டவைகள் மூலமாக நான்கு ரக வீதிகளிலும் வெளிப்புறப்பாடு நடக்கிறது. வருகிற ஏப்., 5 புதன் அன்று காலை 9:00 மணிக்கு மேல் 40 அடி  உயரமுள்ள பெரிய தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க உற்ஸவமூர்த்திகள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாத பெருமாள் உற்ஸவம் நடக்க உள்ளது. ஏப்., 8ல் பிரம்மோற்ஸவ விழா  நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் விக்னேஸ்வரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !