உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புஷ்பவனேஷ்வரர் கோயில் பங்குனி திருவிழா : ஞாயிறு கொடியேற்றம்

புஷ்பவனேஷ்வரர் கோயில் பங்குனி திருவிழா : ஞாயிறு கொடியேற்றம்

திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா வரும் ஞாயிறு அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சமய குறவர்கள், அப்பர்,  திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம், மதுரை சோமசுந்தர பெருமாளால் ரசவாதம் செய்யப்பட்ட 36வது திருவிளையாடல் நடந்த தலம் இது, பங்குனி மாதம் பத்து நாட்கள் திருவிழா வெகு  விமரிசையாக நடைபெறும் . சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான இத்திருக்கோயிலில் இந்தாண்டு பங்குனி திருவிழா வரும் ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன்  தொடங்குகிறது. ஏப்ரல் 2ம் தேதி காலை 11 மணிக்கு திருக்கல்யாணமும், 3ம்தேதி காலை 9மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளது. 5ம் தேதி புதன்கிழமை உற்சவசாந்தியுடன் விழா நிறைவு  பெறுகிறது. தினசரி அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர்  சரவணன் மற்றும் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !