உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னூர் மகாமுனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

குன்னூர் மகாமுனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

குன்னூர்: குன்னூர் அட்டடி மகா கற்பூர முனிஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

குன்னூர் அட்டடி பகுதியில் அமைந்துள்ள மகா கற்பூர முனீஸ்வரர் திருக்கோவிலில் கருவறை மற்றும் புதிய கோபுரம் சீரமைத்து, பொலிவு படுத்தப்பட்டது. நேற்று மகா கணபதி யாக வேள்வி, தனபூஜை, கோ பூஜை, 108 மூலிகை ஹோமம், கலச ஸ்தாபனம், எந்திர ஸ்தாபனம் சிவ பிரதிஷ்டை ஆகியவை நடந்தன. இன்று காலை 6:00 மணிக்கு பாராயணம் வேதிகா அர்ச்சனை தத்துவதி ஹோமங்கள், ஜெயந்தி ஹோமம், சதுர் வேதம், சாமகானம் புஷ்பாஞ்சலி உள்ளிட்டவை நடந்தன. காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முனீஸ்வரருக்கு அபிஷேகம், தச தரிசனம், தசா தானம், சிறப்பு அலங்காரம், மகா தீபாரதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, அ.தி.மு.க., மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குருமூர்த்தி தலைமையில், அ.தி.மு.க.,வினர், ஊர் பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !