உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்து மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

முத்து மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

மேலுார்: மில்கேட் முத்துமாரியம்மன் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு மார்ச் 16 ல் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். மார்ச் 24 திருவிளக்கு பூஜையும், அக்னி சட்டி ஊர்வலம் நடைபெற்றது. இன்று பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகமும் மதியம் அன்னதானமும், முளைப்பாரி மற்றும் அம்மனின் ரத ஊர்வலம் நடைபெற்றது. நாளை மார்ச் 26 ல் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும், மாவிளக்கு பூஜை மற்றும் பூத்தட்டு ஊர்வலமும் முடிவில் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இத் திருவிழாவில் மில்கேட் பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !