ஆனுார் அம்மன் கோவில் பொங்கல் தேர்த்திருவிழா
ADDED :961 days ago
திருப்பூர்: காங்கயம் அருகே ஆனுார் அம்மன் கோவில் பொங்கல் தேர்த்திருவிழா நடந்தது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம், பழையகோட்டையில் ஆனுார் அம்மன் கோவில் உள்ளது. கடந்த, 15ம் தேதி கோவில் விழா துவங்கியது. 21ம் தேதி காவடி தீர்த்தம் எடுத்தல், 22 ம் தேதி அத்தனுார் அம்மன் அழைத்தல் நடந்தது. நேற்று அதிகாலை, உற்சவமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. தேர்நிலைபெயர்தலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து இழுத்தனர். பின், மகா தீபாராதனை, அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, திருத்தேர் வடம் பிடித்து திருவீதி உலா வந்து தேர்நிலையை அடைந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.