ஸ்ரீபெரும்புதுாரில் ராம நவமி உற்சவ விழா
ADDED :947 days ago
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ராம நவமி உற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. ராமர், சீதை, லட்சுமணன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு 7.00 மணிக்கு ராமர் - சீதா திருக்கல்யாண வைபவம் நடந்தது. ஏழு நாட்கள் நடைபெறும் ராம நவமி உற்சவ விழாவின் இரண்டாம் நாளான நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 5.00 மணிக்கு புறப்பாடும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மார்ச் 30ம் தேதி ராம நவமி உற்சவ விழா நிறைவு பெறுகிறது.