உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா துவக்கம்

மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா துவக்கம்

ராஜபாளையம்: ராஜபாளையம் அடுத்த சேத்துார் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை தேங்காய் தொடுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பால், பன்னீர், இளநீர் உள்பட சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நேர்த்திக்கடன் பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர். மாலை 6:00 மணிக்கு அக்னி சட்டி ஏந்தி வீதி உலா வருதல் நடந்தது. அம்மன் வீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா ஏப். 2ல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !