உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சஞ்சீவி நகர் கோவில்களில் கொடிமரங்கள் பிரதிஷ்டை

சஞ்சீவி நகர் கோவில்களில் கொடிமரங்கள் பிரதிஷ்டை

புதுச்சேரி : புதுச்சேரி சஞ்சீவி நகரில் செங்கழுநீரம்மன், திரவுபதியம்மன் கோவில்களுக்கு கும்பாபி ேஷகத்தையொட்டி, 27 அடி உயரமுள்ள கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

உழவர்கரை நகராட்சி, சஞ்சீவிநகரில் சஞ்சீவி விநாயகர், கெங்கையம்மன், செங்கழுநீரம்மன், திரவுபதியம்மன் ஆகிய கோவில்கள் மற்றும் நவகிரகங்கள் அமைந்துள்ளது. இக்கோவில்களில் திருப்பணி  நடைபெற்று வருகிறது. வரும் ஏப்., 26ம் தேதி கும்பாபிேஷகம் நடத்த ஏற்பாட செய்யப்பட்டுள்ளது. அதனையொட்டி, செங்கழுநீரம்மன், திரவுபதியம்மன் கோவில்களுக்கு புதிதாக 27 அடி உயரமுள்ள  வேங்கை மரத்திலான கொடி மரங்கள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. சச்சிதானந்தம் குருக்கள் தலைமையில், நேற்று விடியற்காலை முகூர்த்த கால் நடப்பட்டது. தொடர்ந்து 6.00 மணிக்கு மேல்  செங்கழுநீரம்மன் கோவிலில், சிறப்பு பூஜை, யாகம், கொடி மரம் பிரதிஷ்டையும், 9.00 மணிக்கு மேல் திரவுபதியம்மன் கோவிலில், கொடி மரம் பிரதிஷ்டையும் நடந்தது. இதில், பக்தர்கள் பலர் பங்கேற்று,  சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !