உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

மயிலம் : விழுப்புரம் மாவட்டம் மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. அதனையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்  நடந்தது. தொடர்ந்து, 6:15 முதல்7:15 மணிக்குள் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் மயிலம் ஆதீனம் கொடியேற்றினார். பின், சுவாமிக்கு மஹா தீபாராதனை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு  மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தினமும் சுவாமி கிரிவல காட்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !