திருமலை வெங்கடேச பெருமானுக்கு குடை உபய உற்சவ ஊர்வலம்!
ADDED :4864 days ago
சென்னை: திருமலை வெங்கடேச பெருமானுக்கு, 11 அழகிய குடைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, பிரம்மோற்சவத்தின் போது தமிழக பக்தர்கள் சார்பில் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சமர்ப்பித்து வருகிறது. இந்த ஆண்டு திருப்பதி திருக்குடை உற்சவ ஊர்வலம் கோலாகலமாக நேற்று துவங்கியது.சென்னை பூக்கடை, சென்ன கேசவப் பெருமாள் கோவிலில் திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் கோவில் வளாகத்தில் திருக்குடை உபய உற்சவ ஊர்வல துவக்க விழா நடைபெற்றது. உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீவிஸ்வேச தீர்த்த சுவாமிகள் ஆசி உரை வழங்கினார்.