மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
916 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
916 days ago
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தென்திருப்பதி கோவிலில், ராமநவமி விழா நடந்தது. மேட்டுப்பாளையம் அடுத்த, ஜடையம்பாளையம் ஊராட்சியில், தென் திருப்பதியில் வேங்கடேஸ்வர வாரி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ராம நவமியை முன்னிட்டு, நேற்று காலை நடை திறந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்பு ராமர், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு, ஏக கலச அபிஷேகமும், அதைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவை ஆகியவை நடந்தது. மாலையில் ராமர் அனுமந்த வாகனத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழாவில் அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர், கே.ஜி., டெனிம், கண்ணபிரான் மில்ஸ் ஊழியர்கள் பங்கேற்றனர்.
916 days ago
916 days ago