திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏடு கொடுக்கும் விழா
ADDED :956 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 8ம் நாள் திருவிழாவாக சிவகாமி அம்பாளுக்கு நடராஜர் ஏடு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
காலையில் விடையாத்தி சப்பரங்களில் நடராஜர், சிவகாமி அம்பாள் தனித்தனியாக புறப்பாடாகி வீதிஉலா நிகழ்ச்சி முடிந்து கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினர். தீபாராதனைகள் முடிந்து நடராஜர் கரத்திலிருந்த ஏடுகளை சிவாச்சாரியார்கள் பெற்று சிவகாமி அம்பாளிடம் சேர்ப்பித்தனர். இரவு பச்சை குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய, சுவாமி, தெய்வானை ரத வீதிகளில் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.