உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்

போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்

போடி: போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முருகப்பெருமான், வள்ளி தெய்வாணைக்கும் திருக்கல்யாணம் கோலாலமாக நடந்தது.

போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி காலை முருகன்,வள்ளி தெய்வானைக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது. இரவு வள்ளி, தெய்வானையுடன் தேவசேனா சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் தரிசனம் பெற்றனர். ஏற்பாடுகளை தக்கார் ராமதிலகம் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !