அழகர்கோயில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :958 days ago
அலங்காநல்லுார்: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அழகர் கோயிலில் சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பங்குனி மாதம் திருக்கல்யாண திருவிழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுந்தரராஜ பெருமாளுக்கு ஸ்ரீதேவி பூதேவி ஆண்டாள் நாச்சியார்களுடன் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் நாச்சியார்களுடன் அருள்பாலித்தார். பின் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.