விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு
ADDED :1287 days ago
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் பங்குனி உத்திரம், பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருவாரூர் அருகே விளமலில் மிகவும் பழமை வாய்ந்த பதஞ்சலி மனோகரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் அமாவாசை, பவுர்ணமியில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்ச்சி ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடந்து வருகிறது. இன்று பங்குனி உத்திரம், பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பல்வேறுப்பகுதியில் இருந்து வந்த பக்தர்கள் கோவிலில் நடந்த சிறப்பு அபிஷேக அலங்கார, ஆராதனையில் பங்கேற்றனர். நடந்த வழிபாட்டில் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.