உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூலாம்பட்டி காவிரி ஆற்றில் விநாயகர் சிலை விசர்ஜனம்!

பூலாம்பட்டி காவிரி ஆற்றில் விநாயகர் சிலை விசர்ஜனம்!

இடைப்பாடி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், இடைப்பாடி ஆகிய பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், பூலாம்பட்டி மற்றும் கல்வடங்கம் காவிரி ஆற்றில், நேற்று விசர்ஜனம் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி நாளில், இடைப்பாடி, மகுடஞ்சாவடி மற்றும் சங்ககிரி பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலைகளை வைத்துக்கொள்ள, ஒரு நாள் மட்டுமே, போலீஸார் அனுமதி வழங்கினர். அதனால், நேற்று ஒரே நாளில், மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், இடைப்பாடி ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த, 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், பூலாம்பட்டி, கல்வடங்கம் ஆகிய பகுதிகளில், காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !