மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலம்
ADDED :4845 days ago
மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. விளக்குத்தூண் பழைய மொட்டை பிள்ளையார் கோயில் அருகில் நேற்று மாலை 4.20 மணிக்கு ஊர்வலம் துவங்கியது. இதில், 14 விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் எடுத்து செல்லப்பட்டன. விளக்குத்தூண், சிம்மக்கல் வழியாக ஊர்வலம் நடந்தது. பின், திருமலைராயர் படித்துறை அருகே வைகையில் சிலைகள் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலூர்: மேலூரில், இந்து மகா சபா சார்பில், நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் பத்மநாதன் தலைமையில் நடந்தது. சிவன் கோயில் முன் ஊர்வலம் துவங்கியது. மாவட்ட தலைவர் செல்லத்துரை, மாவட்ட செயலாளர் ரமேஷ்பாண்டியன், ஒன்றிய தலைவர் சங்கன் பங்கேற்றனர். பின், சிலைகள் மண்கட்டி தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டன.