சபரிமலையில் 15ம் தேதி விஷூ கனி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
நாகர்கோவில், சபரிமலையில் சித்திரை விஷ6 கனி தரிசனம் வரும் 15–ம் தேதி நடக்கிறது. இதற்கான 11–ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்தக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் சித்திரை ஒன்று 14–ம் தேதி வருகிறது. ஆனால் கேரள பஞ்சாங்கத்தின் படி கேரளாவில் சித்திரை ஒன்றாம் தேதி 15–ல் வருகிறது. அன்றைய தினம் அதிகாலையில் கனி தரிசனம் நடைபெறும். ஐயப்பன் மூலவிக்ரகம் முன்பு காய்கனிகள் அடுக்கி வைக்கப்பட்டு நடை திறக்கும் போது பக்தர்கள் தரிசனம் நடத்துவார்கள். அதை தொடர்ந்து தந்திரியும், மேல்சாந்தியும் பக்தர்களுக்கு நாணயங்களை கைநீட்டம் வழங்குவார்கள். இதற்காக வரும் 11–ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கிறது. 19 –ம் தேதி இரவு வரை பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தரகள் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.