சர்வ சக்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா
ADDED :1308 days ago
வடமதுரை: வடமதுரை மங்கம்மாள் கேணிஸ்ரீ சர்வ சக்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. விக்னேஸ்வர பூஜை, கணபதி, மகாலட்சுமி, நவகிரக ஹோமங்களுடன் விநாயகருக்கு திருமஞ்சனம், பால், தயிர், நெய், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருள்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. ஸ்ரீ ராமதூது பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயண அய்யங்கார் நடத்தி வைத்தார்.