முனியாண்டி கருப்புசாமி கோயில் திருவிழா
ADDED :993 days ago
மேலுார்: மேலூரில் முனியாண்டி கருப்புசாமி, வடக்கு கருகமணி காளியம்மன் கோயில் 23 ம் ஆண்டு திருவிழா நேற்று துவங்கியது. மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து பாலாபிஷேகம் செய்தனர். தவிர அலகு குத்தி நேத்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கிடா வெட்டி பொங்கல் வைக்கப்பட்டது. இன்று (ஏப்.8) முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.