உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் பங்குனி சனிக்கிழமை சிறப்பு பூஜை

கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் பங்குனி சனிக்கிழமை சிறப்பு பூஜை

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் பங்குனி மாத சனிக்கிழமை முன்னிட்டு மூலவர் கதிர் நரசிங்க பெருமாள் சமேத ஸ்ரீதேவி, பூதேவி அம்மனுக்கு பதினாறு வகை திரவியங்கள் அபிஷேகங்கள் நடந்தது. பின் புத்தாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை வழிபாடுகள் நடந்தது. அருகிலுள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது.‌ இதில் சுற்று வட்டார கிராமம் பொதுமக்கள் கலந்து கொண்டு கதிர் நரசிங்க பெருமாளை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !