புலியகுளம் மாரியம்மன் கோயிலில் 108 பால்குட அபிஷேகம்
ADDED :1097 days ago
கோவை: புலியகுளம் மாரியம்மன் கோவில் பங்குனி மாத உற்சவம் சிறப்பாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுவாமிக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து மூலவர் அம்மன் மஞ்சள் காப்பு, மற்றும் வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் அருள்பெற்றனர்.