உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் அருகே சேர்வீடு வேட்டைக்காரன் சுவாமி திருவிழா

நத்தம் அருகே சேர்வீடு வேட்டைக்காரன் சுவாமி திருவிழா

நத்தம், நத்தம் அருகே சேர்வீடு கிராமத்தில் வேட்டைகாரன் சுவாமி கோவில் புறவி எடுப்பு திருவிழா நடந்தது. விழாவையொட்டி மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகளுடன் வேட்டைகாரன் சுவாமி மற்றும் குதிரை, மதலை சிலைகள் நத்தம் அவுட்டர் பகுதியில் கண் திறக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து சேர்வீடு சென்றது.முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ஆங்காங்கே கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை சேர்வீடு கிராமத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !