ஸ்ரீமுஷ்ணம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :915 days ago
ஸ்ரீமுஷ்ணம், : ஸ்ரீமுஷ்ணம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அரசன் குட்டைத்தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா கடந்த மாதம் 21ந் தேதி காப்புகட்டுதலோடு துவங்கியது. இதில் மகாராஜா, கர்ணன் பிறப்பு, தருமர், கிருஷ்ணர், பீமன், பிறப்பு மற்றும் அம்மன் திருக்கல்யாணம், அரவாண் களபலி, கர்ணமோட்சம் உற்சவங்கள் நடந்தது. தொடர்ந்து தீ மிதி உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீமித்து நேர்த்திகடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை தட்டாரத்தெரு, அரசன்குட்டைத்தெரு விஸ்வகர்மா சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.