ஊட்டி ஹெத்தையம்மன் தேர்பவனி நிகழ்ச்சி: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED :916 days ago
ஊட்டி: ஊட்டி மாரியம்மன் கோவிலில் படுகரின மக்களின் ஹெத்தையம்மன் தேர்பவனி நிகழ்ச்சி நடந்தது.
ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஆண்டுதோறும், ஏப்., மாதம் நடைபெறுகிறது. நடப்பாண்டு தேர்திருவிழாவையொட்டி, கடந்த, 17ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான, தேர் திருவிழா ஏப்., 18ம் தேதி நடக்கிறது. இன்று உபயதாரர்கள் நிகழ்ச்சியில் நீலகிரியில் வாழும் படுகரின மக்களின் ஹெத்தையம்மன் தேர்பவனி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஆடல், பாடலுடன் நடனமாடி மகிழ்ந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஊட்டி நகர படுகர் நலசங்க தலைவர் ராஜேந்திரன், மஞ்சை மோகன், வினோத், குமார் உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.