பழநியில் முருகனுக்கு நேர்ந்துவிட காளைகளுடன் வந்த பக்தர்கள்
ADDED :916 days ago
பழநி: பழநியில் காளைகளை அலங்காரத்துடன் பக்தர்கள் அழைத்து வந்தனர்.
பழநியில் பங்குனி உத்திர திருவிழா நிறைவேற்ற போதிலும் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடிகள் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம், சங்கரண்டாம்பாளையத்தை சேர்ந்த பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர் பாதயாத்திரை ஆக வந்த பக்தர்களுடன் நாட்டு காளைகளை முருகனுக்கு நேர்ந்துவிடப்பட்ட நாட்டு காளைகளை மலர்களால் அலங்கரித்து கிரி வீதி வலம் வந்தனர். இதுகுறித்து காளைகள் வளர்ப்போர் கூறுகையில் இந்த காளைகளுக்கு எந்த வித வேலையும் அளிப்பதில்லை. இவை முருகனுக்காக நேர்ந்து விட்ட காளைகள் என்றனர்.