மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் மறு பங்குனி உத்திர திருவிழா
விருத்தாசலம்: கொளஞ்சியப்பர் கோவில் மறு பங்குனி உத்திர திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா வெகு விமர்சையாக நடக்கும்.பங்குனி உத்திர பெருவிழா முடிந்த 8ம் நாள் மறு பங்குனி உத்திர பெருவிழா நடக்கும். பங்குனி உத்திர பெருவிழா கடந்த 4ம் தேதி நடந்து முடிந்தது. 8ம் நாளான நேற்று மறு பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவில் வளாகத்தில் உள்ள சித்தி விநாயகர் சுவாமி, கொளஞ்சியபர் சுவாமி வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 4:00 மணியளவில் கொளஞ்சியப்பர் சுவாமிக்கு சஷ்டி பூஜை நடந்தது.