/
கோயில்கள் செய்திகள் / பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வீர ஆஞ்சநேயக்கு லட்ச தீபத் திருவிழா
பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வீர ஆஞ்சநேயக்கு லட்ச தீபத் திருவிழா
ADDED :910 days ago
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு 26ம் ஆண்டு லட்ச தீபத் திருவிழா நடந்தது.
உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு 26ம் ஆண்டு லட்ச தீபத் திருவிழா நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் சுவாமிக்கு திருமஞ்சனமும், காலை 11 மணியளவில் ததியாராதனையும், மாலை 3 மணி அளவில் பஜனையும் நடந்தது. மாலை 7 மணியளவில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். இரவு 9 மணியளவில் பெருமாள், அனுமார் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை செய்யப்பட்டு கோவிலை வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் விஜயராகவ அய்யங்கார் செய்திருந்தார்.