பிச்சாண்டவர் கோவிலில் அன்னபடையல் திருவிழா கொடியேற்றம்
ADDED :910 days ago
சிறுபாக்கம்: சிறுபாக்கம் பிச்சாண்டவர் கோவிலில் அன்னபடையல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிறுபாக்கம் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற பிச்சாண்டவர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதம் அமாவாசை அன்று அன்னபடையல் திருவிழா நடக்கும். நடப்பாண்டில், வரும் 19ம் தேதி அன்னபடையல் திருவிழா நடக்கிறது. இதனையொட்டி, நேற்று பிச்சாண்டவர் சுவாமிக்கு, பால், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் அன்னக்கொடி ஏற்றி திருவிழா துவங்கியது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.