உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரகண்டநல்லூர் புத்துமாரியம்மன் கோவில் சித்திரை விழா

அரகண்டநல்லூர் புத்துமாரியம்மன் கோவில் சித்திரை விழா

திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் புத்து மாரியம்மன் கோவில் சித்திரை பெருவிழாவின் ஒரு பகுதியாக அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அரகண்டநல்லூர் தரைப்பாலம் அருகே பழமை வாய்ந்த புத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் அம்மன், மீனாட்சி அலங்காரத்தில் அருள் பாலித்தார். மகாதீபாராதனை, அர்ச்சனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !