/
கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் தரிசனம்
காளஹஸ்தி சிவன் கோயிலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் தரிசனம்
ADDED :1071 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் குடும்பத்தாரோடு இன்று ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோயிலுக்குள் சென்றவர் முன்னதாக கோயிலில் நடக்கும் நான்கு கால அபிஷேகங்களில் இரண்டாவது கால ருத்ராபிஷேகத்தில் குடும்பத்தாரோடு ஈடுபட்டார்.ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்ததோடு கோயில் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவித்து சாமி அம்மையார்களின் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.