உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவையாறு விமோசன பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

திருவையாறு விமோசன பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

தஞ்சாவூர், திருவையாறு அருகே கண்டியூரில், விமோசன பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான இன்று பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது.  

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த கண்டியூரில் 108 திவ்ய தேசத்தில் 15வது ஸ்தலமாக விளங்கிவரும் அருள்மிகு அரசாப விமோசன பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு முக்கிய நாளான இன்று பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், மேல தாளம், வேதங்கள் முழங்க உபன்யாசம்  செய்தனர். முன்னதாக, பெருமாள் காசிக்குப் போகும் வைபவம் பெருமாள் கமலவல்லி தாயாருக்கு மாலை மாற்றும் வைபவம், ஊஞ்சலில் அமர வைத்து பால்கொடுத்தல், சீர் எடுத்தல், திருமாங்கல்யம்,  சீர் பாடல், சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. திருக்கல்யாண வைபவத்தை மதுரையை சேர்ந்த  வெங்கட்ராமன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் உபயத்தில் கோவில் நிர்வாகம் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !