தொடர் விடுமுறை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :1073 days ago
ராமேஸ்வரம்: தொடர் விடுமுறையாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஏப்., 14 முதல் 16 வரை தொடர் விடுமுறையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுமுறை விட்டனர். இதனால் கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் பல பகுதியில் இருந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இன்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கோவில், இரண்டாம் பிரகாரம், மூன்றாம் பிரகாரத்தில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் பக்தர்கள் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.