குருநாத சுவாமி கோயிலில் சேத்தாண்டி வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :1274 days ago
கமுதி: கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் குருநாத சுவாமி கோயில் 47வது குருபூஜை விழா, பெரியநாச்சி அம்மன், சித்தி விநாயகர் கோயில் பொங்கல் விழா முன்னிட்டு ஏப்.5 தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் மூலவர்,அம்மனுக்கு அபிஷேகம்,சிறப்புபூஜை நடந்தது. காப்புகட்டிய பக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து ஏராளமானோர் பால்குடம்,அலகுகுத்தி, சேத்தாண்டி வேடம் அணிந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.பின்பு பெரியநாச்சி அம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்புபூஜை நடந்தது.கிராமமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.விழாவில் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.