காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :870 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் அவதரித்த சித்திரை ரேவதி, சோபகிருது 36வது ஆண்டு விழா மற்றும் 10ம் ஆண்டு திருவிளக்கு பூஜை காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவிலில் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு அன்னதானமும், மாலை 5:00 மணிக்கு உலக நன்மைக்காகவும், பொதுமக்கள் நோயின்றி வாழவும், குடும்ப நன்மைக்காகவும் திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் பங்கேற்ற பெண்கள் குத்து விளக்கேற்றி, குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்து விநாயகர், துர்கா, மஹா லட்சுமி, சரஸ்வதியை ஆவாஹனம் செய்து, 1008 லலிதா சகஸ்ரநாம பூஜை செய்தனர். தொடர்ந்து உற்சவர் வீதியுலா நடந்தது. முக்கிய வீதி வழியாக உலா வந்த சுவாமிக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூரம் தீபஆராதனை காண்பித்து வழிபட்டனர்.