பிரான்மலை வடுக பைரவர் கோயிலில் ஜெயந்தன் பூஜை
ADDED :1034 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை வடுக பைரவர் கோயில் ஜெயந்தன் பூஜை நடந்தது.
இந்திரன் மகன் ஜெயந்தன் மகாராஜா பெண்ணாசையால் சாபம் பெற்றார். பிறகு யோக பைரவர் முன் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார். இதை நினைவு கூறும் வகையில் பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை வடுக பைரவர் கோயிலில் இன்று ஜெயந்தன் பூஜை விழா நடந்தது. காலை 10:00 மணிக்கு மதகுபட்டி கிராமத்தார்கள் பால்குடம் சுமந்து வந்து வடுக பைரவருக்கு பாலாபிஷேகம் செய்தனர். 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 8:30 மணிக்கு வெள்ளித் தேரில் வடுகபைரவர் வீதி உலா வந்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகள், முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி, மாவட்டச் சேர்மன் பொன்மணி பாஸ்கரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.