தண்டுமாரியம்மன் கோவில் கொடியேற்றம் கோலாகலம்
ADDED :958 days ago
கோவை: கோவை தண்டுமாரியம்மன் கோவிலில், சித்திரைத்திருவிழா கொடியேற்றம் விழா,வெகு விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை கோவை இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோவில் செயல் அலுவலர் வெற்றிச்செல்வன் முன்னிலையில் நடந்த இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை இருவேளைகளிலும், யாகசாலை பூஜை நடக்கிறது.