திரவுபதி அம்மன் கோவிலில் 7ம் தேதி தீமிதி உற்சவம்
ADDED :905 days ago
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் தீமிதி உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 5ம் தேதி திருக்கல்யாணமும், 6ம் தேதி காலை தேர் திருவிழா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக வரும் 7ம் தேதி காலை 10 மணிக்கு ஊரணி பொங்கலும், மாலை 6 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.