ஐயனாரப்பன் கோவிலில் 23ம் தேதி நன்னீராட்டு விழா
ADDED :958 days ago
திருக்கனுார்: மணலிப்பட்டு ஐயனாரப்பன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா வரும் 23ம் தேதி நடக்கிறது.
திருக்கனுார் அடுத்த மணலிப்பட்டு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூரணிதேவி, புஷ்கலாதேவி உடனுறை ஐயனாரப்பன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நேற்று காலை மூத்த பிள்ளையார், முதனிலை வேள்வியுடன் துவங்கி பால கணபதி பூஜை, பால விநாயகருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை திருவிளக்கு மற்றும் தீபத்திருமகள் வழிபாடுகள் நடந்தது. முக்கிய நிகழ்வாக வரும் 23ம் தேதி காலை 7:00 மணிக்கு ஐயனாரப்பனுக்கு நான்காம் கால வேள்வி வழிபாடு, 9:00 மணிக்கு திருக்குடங்கள் புறப்படுதல், 9:40 மணியளவில் பூரணிதேவி பூரணிதேவி, புஷ்கலாதேவி உடனுறை ஐயனாரப்பனுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது.