உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா துவக்கம்

சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா துவக்கம்

சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழா, கொடியேற்றத் துடன் கோலாகலமாக துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொண்டை மண்டலத்தில் உள்ள பிரதான சிவாலயங்களில் ஒன்றாக, சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் விளங்குகிறது. 450 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சித்திரை பெருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு, இன்று காலை, உற்வ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, விசஷே பூஜைகள் நடத்தப்பட்டு, கொடியேற்றப்பட்டது.அதைத் தொடர்ந்து, அஸ்தமானகிரி விமான புறப்பாடு நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !