அய்யப்ப கோயில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை துவக்கம்
திருப்புத்தூர்: திருப்புத்தூர் தர்மசாஸ்தா அய்யப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் துவங்கியது.
இக்கோயிலில் திருப்பணிகள் நடந்து 5 வது முறையாக கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் மாலை யாகசாலைக்கான பூர்வாங்க பூஜைகளான அனுக்ஞை, விக்னேஸ்வர, தன பூஜைகள் நடந்தது. நேற்று கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி நடந்து யாகசாலை கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மாலை 6:30 மணிக்கு முதற்கால யாகபூஜை துவங்கியது. யாகசாலை பூஜைகளை பிள்ளையார்பட்டி கே.பிச்சைக்குருக்கள் |தலைமையில் சிவாச்சார்யர்கள் மேற்கொள்கின்றனர். இன்று 2, 3 ம் கால யாக பூஜைகளும், நாளை 4, 5ம் கால யாக பூஜைகளும் நடைபெறும். ஏப்.27 ல் 6ம் கால யாக பூஜை நடந்து கடம் புறப்பாடாகி காலை 9:30 மணி முதல் காலை 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெறும்.