உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலுார் செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

கூடலுார் செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

கூடலுார்: கூடலுார் செல்வ முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்தது.

கூடலுாரில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கடந்த சில நாட்களாக காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வடக்கு காளியம்மன் கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் 16 அடி நீளத்தில் வேல் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் மெயின் ரோடு, காமாட்சியம்மன் கோயில் தெரு, பெட்ரோல் பங்க் தெரு வழியாக கோயிலை அடைந்தனர். கோயிலுக்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீ மிதி விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !