சோழவந்தான் திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
சோழவந்தான்: சோழவந்தான் திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி 12 நாள் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடந்தது. பிரசாந்த் சர்மா பட்டர் தலைமையில் யாக பூஜைகள் நடந்தது. இதையடுத்து கொடி நான்கு ரத வீதியில் வலம் வந்து கோயிலின் முன்புள்ள கொடிகம்பத்தில் கொடியேற்றினர். இவ்விழாவில் தினந்தோறும் மகாபாரத புராண கதாபாத்திரம் ஏற்று நிகழ்ச்சிகள் நடைபெறும். இதையடுத்து ஏப்.25ல் சக்தி கரகம் எடுத்து வரப்படும். ஏப்.26ல் திருக்கல்யாணமும், மாலை சுவாமி வீதியுலா நடைபெறும். ஏப்.27ல் கோட்டை கட்டுதல் நிகழ்வும், சயிந்தவன், துரோணாச்சியர் வேடம் அணிந்து வதம் நிகழ்ச்சி நடைபெறும். ஏப்.28ல் கருப்பட்டியில் குந்தம் வருதல். ஏப்.29ல் பீமன் வேடம் கீசகன் வதம் நிகழ்ச்சி நடைபெறும். ஏப்.30ல் தபசு மரம் நடுதல், பாஸ்பதாஸ்திரம் பெறுதல். மே.1ல் அரவான் படுகளம், அம்மன் சிம்ம வாகன புறப்பாடு. மே.2ல் துரியோதனன் படுகளம், திரவுபதி சபதம் முடிந்து கூந்தல் முடிப்பு நிகழ்ச்சி நடைபெறும். மே.3ல் பூக்குழி இறங்குதல். மே.4ல் கொடியிறக்கம், தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறுகிறது. மே.5ல் பட்டாபிஷேகம் நடைபெறும். இவ்விழாவில் தினந்தோறும் மகாபாரத சொற்பொழிவுகள் நடைபெறும். கோயில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவகர்லால், குப்புசாமி, செயல் அலுவலர் இளமதி ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். சேர்மன் ஜெயராமன், முன்னாள் சேர்மன் முருகேசன், நகர செயலாளர்கள் சத்தியபிரகாஷ், திரவியம் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.