உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியதுரை கருப்பசாமி கோயிலில் 300 கிடா வெட்டி வழிபாடு

பெரியதுரை கருப்பசாமி கோயிலில் 300 கிடா வெட்டி வழிபாடு

ஆயக்குடி: பழநி, ஆயக்குடி அருகே கோம்பைபட்டி கிராமத்தில் உள்ள பெரியதுரை கருப்பசாமி கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலி கொடுத்து வழிபாடு செய்தனர்.

பழநியை அருகே கணக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோம்பை பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியதுரை, கருப்பண்ணசாமி, செல்வவிநாயகர், தன்னாசியப்பன் பொலக்கருப்பு கோயில் உள்ளது. கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் வளம் பெற வேண்டி கிராம மக்கள் ஆட்டுக்கிடாய் பலி கொடுத்து வழிபடுவது வழக்கம். 42வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று 300க்கு மேற்பட்ட ஆடுகளை பலி கொடுத்து வழிபாடு செய்தனர். அனைவருக்கும் உணவு சமைத்து விருந்து வழங்கப்பட்டது. திருவிழா நடைபெறும் நேரத்தில் மழை பெய்ததால் ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !